ஆறுமுகனேரியில் உள்ள கோவில்களில் கொடை விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகில் உள்ள அருள்மிகு பொன் இசக்கி அம்மன் திருக்கோவில் கொடை விழா ஆடி கடைசி செவ்வாய்கிழமையான 16ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.பொங்கலிட்டும் வழிபாடு நடைபெற்றது.ஆறுமுகனேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஆறுமுகனேரி டிசிடபிள்யூ சால்ட் லைனில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கீரனூர் மாவு இசக்கி அம்மன் கோவில் கொடை விழாவும் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.அதன் பின் இரவு முழுவதும் அம்மன் அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின் புதன்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
அதசன்பின்னர் அன்னதானம் நடைபெற்றது.விழாவி்ல் பல்வேறு பகுதிகளிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
0 comments