மூலவர் | மாரியம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | உச்சியினி மாகாளி அம்மன் முப்பிடாதி அம்மன் நட்டாத்தி அம்மன் காளி அம்மன் அக்கினி காளி அம்மன் நாராயணசாமி பத்திரகாளி அம்மன் பெருமாள்சாமி சுடலைமாடசாமி முருகன் |
நடைத்திறப்பு | தினசரி காலை மாலை 7.00 மணியளவில் வழிபாடு நடைபெறுகிறது. |
திருவிழாக்கள் | தைமாதம் பொங்கலிடுதல் சித்தரை மாதம் 7ம் நாள் வில்லுப்பாட்டுடன் கொடைவிழா நடைபெறுகின்றது. கொடைவிழாவின் போது திருவிளக்கு வழிபாடு நடத்தப்படுகின்ற மார்கழி மாதம் சிறப்பு மண்டகப்படி வழிபாடு. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நிகழ்த்தப் பெறுகிறது. பத்திரகாளி கதை மாரியம்மன் கதை மகாபாரதக்கதை இராமயணக்கதை முதலியன பாடப்படுகின்றன. கும்மி பாடல்கள் முளைப்பாரி பெண்கள் பாடுகின்றனர். வில்லுப்பாடல் நிகழ்த்தப் பெறுகிறது. பத்திரகாளி கதை மாரியம்மன் கதை மகாபாரதக்கதை இராமயணக்கதை முதலியன பாடப்படுகின்றன. கும்மி பாடல்கள் முளைப்பாரி பெண்கள் பாடுகின்றனர். |
நேர்த்திக்கடன்கள் | முளைப்பாரி எடுத்தல் ஆயிரங்கண்பானை மாவிளக்குப் பெட்டி எடுத்தல் மஞ்சள் பானை பானக்காரம் வைத்தல் சாமிக்குரிய அணிகலன்களான நகைகள் கடையம் உடுப்புகள் குத்து விளக்கு மணி முதலியன செலுத்தப்படுகின்றன. |
பிறசெய்திகள் | இத்தெய்வம் வடக்கே இருந்து வந்ததாகவும் இப்பகுதியில் பூவரச மரத்தில் குடியிருந்து அருளாட்சி செய்ததாகவும் கூறப்படுகின்றது. கொடைவிழா தொடங்குவதற்கு முன்னதாக கோயிலை உருவாக்கிய தேரடி மாடசாமிக்கு முதல் வழிபாடு நடத்தப்படுகிறது. |
You Are Here: Home» Hindu , Temples » மாரியம்மன்கோயில்-இலட்சுமிமாநகரம்
0 comments