ஆறுமுகனேரி நகர செயலாளர் அலுவலகம் தீவைத்த வழக்கில் மேலும் ஒருவரை ஆறுமுகனேரி போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர்.
ஆறுமுகனேரி நகர செயலாளர் கா.மு.சுரேஷ்.இவரை 1.03.2011ல் கொலை செய்ய முயன்ற வழக்கிலும், 21.05.2011ல் சுரேஷ் அலுலவகம் தீவைத்த வழக்கிலும் மேலும் அவரது தம்பி ராஜேஷ் டாஸ்மார்க் பாரில் வெடிகுண்டு வீசி தாக்கிய வழக்கிலும் திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆறுமுகனேரியைச் சேர்ந்த ஆல்நாத் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.இதில் ஆல்நாத் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அலுவலகத்திற்கு தீவைத்தது மற்றும் பார் மீது வெடி குண்டு வீசிய வழக்கில் ஆறுமுகனேரி விநாயகர் கோவில் தெரு கே.ஆர்.முருகன் மகன் ராதாகிருஷ்ணன்(29) என்பவரை ஆறுமுகனேரி போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
அவர் திருச்செந்தூர் மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்
0 comments