உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணமான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் ஆரம்பகால, இறந்த கால, நிகழ் கால, எதிர் கால ஆற்றல்களை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது. மதுரை மகாத்மா கல்விக்குழுமத் தாளாளர் பிரேமலதா பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் ஆர். சண்முகானந்தன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மகாத்மா பள்ளி முதல்வர் விஜயாசுந்தர், மகாத்மா சிபிஎஸ்இ பள்ளி துணை முதல்வர் மீனாகருப்பையா, மகாத்மா பாபா மாண்டிசோரி பள்ளி மூத்தத் தலைமை ஆசிரியை ஜெய்னம்பு சலீமா மற்றும் ஆசிரியர் கலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் ஆற்றல்கள் பற்றி மாணவர், மாணவிகள் தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.
கண்காட்சி தொடக்க விழாவில், டிசிடபிள்யூ நிறுவன செயல் உதவித் தலைவர் சுபாஷ் டாண்டன், டிசிடபிள்யூ நிறுவன மூத்த பொது மேலாளர்கள் சி.சந்திரசேகரன், வி.ராதாகிருஷ்ணன், பொது மேலாளர்கள் ஆர்.பசுபதி, கே.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி எஸ்.டி.ஆர். பள்ளி, ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி நடுநிலைப் பள்ளி, அன்னம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி, காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி, திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முக்காணி செயின்ட் அந்தோணியார் ஆர்.சி.தொடக்கப்பள்ளி, ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
0 comments