திருச்செந்தூர் திருக்கோவில் வளாகத்தில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கம் அருகில் ரூ. 5 லட்சத்தில் பக்தர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் புதிய காலணிகள் பாதுகாப்பறை கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் டி.வரதராஜன் ஆகியோர் பாதுகாப்பறையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளர் கு.கோமதி, விடுதி மேலாளர் அ.சிவநாதன், பணியாளர்கள் கிட்டுமணி, சரவணபவ, மணியம் ரமேஷ், சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Daily News
0 comments