ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

Image result for வெயிலுகந்தம்மன் கோயில் திருச்செந்தூர்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்றுகாலை நடந்தது. இதையட்டி அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், அதிகாலை 4 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5.20 மணிக்கு அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் சுப்பிரமணிய வல்லவராயர் கொடியேற்றினார். 

தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் கோமதி, திருவிழா பிரிவு எழுத்தர் வெங்கடேஷ், இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், விதாயகர்த்தா சிவசுப்பிரமணியன், சிவன் கோயில மணியம் தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மாலை 7 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இத்திருவிழாவைமுன்னிட்ட காலை மற்றும் மாலையில் அம்பாள் பல்வேறு கோலத்தில் வீதி உலா வந்து கோயிலை சேருகிறார். 10ம் திருவிழாவான வரும் 31ம் தேதி அதிகாலை வெயிலுகந்தம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் ஆகியோர் செய்துளளனர். 

0 comments

Leave a Reply