திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை கிராமத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலமாக திருச்செந்தூர் தாலுகா ஆலந்தலை மீனவ கிராமத்தில் கடல் சங்கம் துவக்க விழாவும், கடல் சங்க மாணவர்கள் மூலமாக ஆமைகள் பாதுகாப்பது பற்றிய பெருந்திரள் விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) கோ. சுகுமார் அவர்கள் கடல் சங்கத்தை முறைப்படி துவக்கி வைத்து, கடல் சங்கத்தின் மூலமாக நடைபெற்ற முதல் நிகழ்ச்சியான ஆமைகள் பாதுகாப்பது பற்றிய சிற்றேட்டையும் வெளியிட்டு பேசினார். வந்திருந்த அனைத்து மீன்வர்களுக்கும் ஆமைகள் பாதுகாப்பது பற்றிய விளக்கத்தை மீன்பிடி மற்றும் மீன்வள பொறியியல் துறை பேராசிரியர் நீதிச்செல்வன் அவர்கள் படக்காட்சிகளோடு விளக்கினார்.
0 comments