துாத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்தி்ட்ட உதவிகள் வழங்கும் விழா துாத்துக்குடி வ.உ.சி கல்லுாரி மைதானத்தில் நடந்தது,விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு வரவேற்புரையாற்றினார். விழாவில் சமுக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வை குறையுள்ள 3 பேருக்கு உருப்பெருக்கி கருவியும், 406 பேருக்கு காதொலி கருவியும், 60 இலவச தையல் மிஷினும், 51 பேருக்கு செயற்கை அவயனங்களும், 17 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உட்பட 1736 பேருக்கு ரூ.3 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 633 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
You Are Here: Home» Daily News » துாத்துக்குடியில் 1736 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பா,வளர்மதி, எஸ.பி.சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.
0 comments