டார்னியர் விமான விபத்தில் பலியான 3 இளம் விமானிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த டார்னியர் விமானத்தில் பயணம் செய்த கடலோரக் காவல் படை விமானி துணை கமாண்டன்ட் வித்யாசாகர், துணை விமானி டெபுடி கமாண்டன்ட் எம்.கே.சோனி, வழிகாட்டுபவராக துணை கமாண்டன்ட் சுபாஷ் சுரேஷ் ஆகிய இளம் வீரர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டதை அறிந்து மிகவும் துயருற்றேன்.
இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள்,, தமிழக அரசுடனும், தமிழகக் காவல்துறையுடனும் இணைந்து பல்வேறு மீட்புப் பணிகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இழந்து வாழும், குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று விமானிகளின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments