ஆறுமுகனேரி மேலச் சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்திருவிழா ஜூலை 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் மாலையில் ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை இரவு புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் சொரூபச் சப்பரப் பவனி புறப்பட்டது. முக்கிய தெருக்கள் வழியாகச்சென்று சப்பரம் அன்னம்மாள் ஆலயத்தை பவனியாக வந்தடைந்ததும் அங்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
இதில், கொம்புத்துறை பங்குத்தந்தை விக்டர்லோபா திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் வழங்கினார். இதையடுத்து சப்பரம் சவேரியார் ஆலயத்தை சென்றடைந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி நடுவம் இயக்குநர் வெனிஸ்குமார் தலைமை வகித்தார். ஸ்டார்வின் அடிகளார், இருதயராஜ், தூத்துக்குடி மலரும் மண உறவு இயக்குநர் ரூபர்ட் அருள்வளன் ஆகியோர் ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நடத்தினர்.
ஏற்பாடுகளை ஊர் கமிட்டி தலைவர் அமிர்தம் பர்னாந்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
0 comments