முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி, 6 மாநில முதல்வர் ராமேஸ்வரம் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ராமேஸ்வரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராமேசுவரம் தீவில் மட்டும் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியப் பிரமுகர்கள் பலர் வருகை தர உள்ளதால் அங்குள்ள 5 ஹெலிபேடுகள் தயார் நிலையில் வைக்கப்படும். பழைய ஹெலிபேடு முழுவீச்சில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 100 கிமீ சுற்றளவு பகுதிகளில் உள்ள ஹெலிபேடுகளை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானததில் உள்ள ஹெலிபேடில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
0 comments