ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகனேரி ரயில் நிலைய உதவி அதிகாரி சசிகாந்த் குமார். இவர் வியாழக்கிழமை இரவு 8.30-க்கு ரயில் நிலையத்தில் அலுவலகப் பணி முடிந்ததும் கதவைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நிலையத்துக்கு வந்தபோது அலுவலகக் கதவு திறந்து கிடந்ததாம். அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள நான்கு அறைகளிலும் பொருள்கள் சிதறிக் கிடந்தனவாம். மேலும் அங்கிருந்த இரும்பு லாக்கரின் மேல்புறம் உடைக்கப்பட்டு,அதன் உள்புற பூட்டு திறக்க முடியாமல் பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததாம்.
பயணச்சீட்டு வழங்கும் அறையில் உள்ள பெட்டியிலிருந்த ரூ.70-க்கான சில்லறை நாணயங்கள் மட்டும் திருட்டு போயிருந்தனவாம்.
உடனே, ஆறுமுகனேரி காவல் நிலையத்துக்கும், திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் கணபதி, திருநெல்வேலி ரயில்வே காவல் ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர் ஆறுமுகம், திருச்செந்தூர் ரெயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். அப்போது, நிலைய கண்காணிப்பாளர் நாராயணன் உடனிருந்தார்.
மேலும், தூத்துக்குடியிலிருந்து வந்த விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். மோப்ப நாயும் சோதனைக்கு விடப்பட்டது.

0 comments