திருச்செந்தூரில் திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கிங்காங் ஜிம் வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இப்போட்டிக்கு முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணல்மேடு மா.சுரேஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் ஜெ.அந்தோனிட்ரூமன், மா.சுதாகர், சு.கோமதிநாயகம், பி.ஜெரால்டு, வீ.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
6 பிரிவுகளாக நடந்த போட்டியில் 60 வீரர்கள் பங்கேற்றனர். இதில் பார்த்திபன் (கிங்காங் ஜிம்), முத்துசெல்வம் (கிங் காங் ஜிம்), ஐக்கோட் (சாம்பியன் பவர் ஜிம்), செந்தில்குமார் (நேஷனல் பவர் ஜிம்), மணிகண்டன் (சாம்பியன் பவர் ஜிம்), பிரபாகரன் (சாம்பியன் பவர் ஜிம்) ஆகியோர் அந்தந்த பிரிவுகளில் முதலிடமும், பார்த்திபன் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றார். வெற்றிபெற்றவர்களுக்கு திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் செ.வெற்றிவேல், பேரூராட்சித் தலைவர்கள் ஆறுமுகனேரி அ.கல்யாணசுந்தரம், கானம் வெ.செந்தமிழ்சேகர், தென்திருப்பேரை பை.மு.ராமஜெயம் ஆகியோர் பரிசுக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மிஸ்டர் இந்தியா மா.காமராஜும், நடுவர்களாக கா.முருகன், ஜெகன் ஆகியோரும் பணியாற்றினர்.
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ரெ.காமராசு, வழக்குரைஞர்கள் கிருபா, குரு, 4-வது வார்டு தி.மு.க. இளைஞரணிச் செயலர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வாள் சுடலை நன்றி கூறினார்.
courtesy : Dinamani.com
0 comments