அய்யா வைகுண்டசாமியின் 182-வது அவதார தினத்தையொட்டி, திருச்செந்தூரில் இருந்து சீர்காட்சி வைகுண்ட கருணைப் பதிக்கு சப்பர ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அய்யா அருளிய அகிலத்திரட்டை தொட்டில் வாகனத்தில் வைத்து சப்பரமாக திருச்செந்தூரில் இருந்து பல்வேறு ஊர்கள் வழியாக சீர்காட்சிக்கு கொண்டு வரப்பட்டது.
அன்று காலை ஏழு மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் சிற்றுண்டி தர்மம் நடைபெற்றது. சீர்காட்சி தருவைக்கரை அருகே பணிவிடை தர்மம் நடைபெற்றது. பகல் 12- க்கு ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது.
கோயிலில் உச்சிப்படிப்புக்குப் பின்னர் அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடை, உகப்படிப்பு, அகண்ட உகப்படிப்பு ஆகியவை நடைபெற்றன. இரவு 8 மணிக்கு ஊர்பொதுமக்களுக்கு சிற்றுண்டி தர்மம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பதியின் நிர்வாகத் தலைவர் சிவாஜி, செயலர் பர்க்குணம், பொருளாளர் ஜெயசிங், பால்வண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Courtesy : Dinamani.com
0 comments