ஆறுமுகனேரி இந்து தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில், மாணவர், மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சியை இந்து மேல்நிலைப் பள்ளி, திரவியம் தொடக்கப் பள்ளி, டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி மாணவர்கள் கண்டு களித்தனர். ஏற்பாடுகளை இந்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இ.மாரித்தங்கம், சரஸ்வதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.ஜே.உதயசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்
Courtesy : Dinamani.com
0 comments