திருச்செந்தூர் கடலோரக் கிராமங்களில் மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.
பெரியதாழையில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விசைப்படகு மீனவர்கள் தங்கள் வலைகளை சேதப்படுத்துவதைக் கண்டித்தும், அவர்கள் விதிகளை மீறி மீன்பிடிப்பதாகக் கூறியும் திருச்செந்தூர் கடலோர மீனவ கிராமமக்கள் திங்கள்கிழமை, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புன்னக்காயல், பழைய காயல், காயல்பட்டினம் கொம்புத்துறை, சிங்கித்துறை, வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர் ஜீவா நகர், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு மற்றும் பெரியதாழையைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்திவைத்திருந்தனர்.
courtesy : Dinamani.com
0 comments