ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி அருகே மாட்டுவண்டிப் போட்டி

தூத்துக்குடி அருகே கோயில் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியில் ஏராளமான வண்டிகள் பங்கேற்றன.

தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் துர்க்கையம்மன்கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 வண்டிகள் பங்கேற்றன. 15 கி.மீ. போட்டித் தொலைவு கொண்ட பெரிய மாட்டுவண்டிப் போட்டியில் 11 வண்டிகள் கலந்துகொண்டன. இதில், முதல் பரிசு பெற்ற ஓட்டப்பிடாரம் மாரியப்பன் வண்டிக்கு ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்ற செக்காரக்குடி சுப்புராஜ் வண்டிக்கு ரூ. 14 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற ஓட்டப்பிடாரம் சரண்யாகுட்டி வண்டிக்கு ரூ. 13 ஆயிரமும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

10 கி.மீ. போட்டித் தொலைவு கொண்ட சின்ன மாட்டுவண்டிப் போட்யில் 21 வண்டிகள் கலந்துகொண்டன. இதில், முதல் பரிசு பெற்ற குறுக்குச்சாலை புதியதர்ஷினி வண்டிக்கு ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்ற  சண்முகபுரம் ஜெயக்குமார் வண்டிக்கு ரூ. 9 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற புதியம்புத்தூர் செல்வமுத்துவிநாயகர் வண்டிக்கு ரூ. 8 ஆயிரமும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

courtesy : Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply