திருச்செந்தூரில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ப.நல்லசிவம் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த 553 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். புதன்கிழமை தொடங்கிய பயற்சி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
தொடக்க நாளில் மண்டல அலுவலர்களான தூத்துக்குடி மாநகராட்சி நிலவரி திட்ட வட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, தேர்தல் துணை வட்டாட்சியர் மலர்தேவன், மண்டல துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சுடலை உள்ளிட்டோர் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுவது, அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் சுமார் 450 பேர் கலந்துகொண்டனர். மண்டல வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சிகளை அளித்தனர். இப்பயிற்சி வகுப்பை வட்டாட்சியர் முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார்.
courtesy: Dinamani.com
0 comments