அதிமுக 42-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி காயல்பட்டினம் நகரக் கிளை சார்பில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைச் செயலர் ஷேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். நகரச் செயலர் செய்யது காசிம் முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முஹ்யித்தீன் வாழ்த்திப் பேசினார்.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நகர இணைச் செயலர் அருணாசலக்கனி, பொருளாளர் ஜின்னா, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Courtesy: Dinamani
0 comments