முகநூல்[FACEBOOK] மூலம் தூத்துக்குடிமாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்ட முறையீட்டிற்கு உடனுக்குடன் பதிலும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
அய்யா,வணக்கம்.
[1]திருச்செந்தூர் பேரூராட்சிக்கு எதிரே இந்தியசுதந்திரப்போராட்டத் தியாகிகள் பெயர் பொறித்த நினைவு ஸ்தூபி உள்ளது.இந்த ஸ்தூபி வாசகசாலையுடன் பூங்காவாக அமைக்கப்பட்டது ஆகும்.தற்போதுஇந்த பூங்காவை திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் மது அருந்தும் மறைவிடமாகவும் சமூகவிரோதிகள் பயன் படுத்திவருகின்றனர். ஸ்தூபியை பார்வையிட உள்ளே எவரும் அளவிற்கு நாற்றம் அடிக்கின்றது.தற்போது பேரூராட்சியின் குப்பை அள்ளூம் வண்டியும் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பேரூராட்சி அலுவலகம் இந்த ஸ்தூபியின் எதிரே 20 அடி தூரத்தில்தான் உள்ளது என்பது வேதனைக்குரியது.எத்தனையோ பராமரிப்பிற்காக கோடி கோடியாக அரசு இப் பேரூராட்சிக்கு வழங்குகிறது.அதில் சில ஆயிரம் செலவிட்டு பெயிண்ட் அடிக்கக்கூட மனமில்லாமல் உள்ளனர்.இது தியாகிகள் குடும்பத்தினருக்கும்,தேச பக்தர்களுக்கும் மன வேதனையைத் தருகின்றது. .தியாகிகளின் தியாகத்தை மதித்து மத்திய மாநில அரசுகள் நினைவுச்சின்னம், மணீமண்டபங்களைக் கட்டுவித்து பராமரித்து வருகின்றனர்.ஆனால் திருச்செந்தூர் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும் இங்கு தியாகிகளின் நினைவுச்சின்னம் கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது.எனவே தாங்கள் அருள் கூர்ந்து அவ்விடத்தை பூங்காவாகவும்;நினைவிடத்தை எந்நேரமும் கடுமையாகக்கண்காணித்துப் பாதுகாக்க பணியாளரை நியமித்திடவும்;கட்சிகளின் சுவரொட்டிகள்; விளம்பரங்களை அதன் சுற்றுச்சுவரில் எழுதாதவாறும்; ஸ்தூபி முன்பு எவ்வித கடையையும் போடாதவாறும் பாதுகாத்திடவும் ஆணையிட அன்புடன் வேண்டுகிறோம்.
[2]இந்த ஸ்தூபியின் முன்புறம் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜருடைய சிலையும் உள்ளது.எனவே இச்சிலையையும் பராமரித்து சுற்றுப்புறத்தையும் சுத்தமாக கண்காணித்திட பேரூராட்சிக்குஆணையிட வேண்டுகிறோம்
[3]இந்த சிலையும்,தியாகிகள் ஸ்தூபியும் உயரம் குறைந்த ஒரே சுற்றுச்சுவரால் அமைந்துள்ளது என்வே இரவில் கதவு பூட்டியிருந்தாலும் ஏறிக்குதித்து சமூக விரோதிகள் அசிங்கப்படுத்திச்சென்றுவிடுகின்றனர். எனவே சுற்றுச்சுவரையும் உயர்த்தி அழகுபடுத்திச் சிறப்பித்திட இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் பணிவன்புடன் வேண்டுகிறோம்.
இவண்
இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கம்,
36.காந்தித் தெரு,
ஆறுமுகநேரி-628202
Tags:
arumuganeri
,
ஆறுமுகநேரி
0 comments