ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » மெயின்ரோட்டில் சுற்றித்திரியும் தெருவிலங்குகளால் தினமும் வாகனஓட்டிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர்

ஆத்தூர்-ஆறுமுகநேரி .ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி சுற்றுப்பகுதியில் தற்போது தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் ரோட்டில் 24 மணிநேரமும் புழுதி பறந்து வருகிறது. இதனால் இந்த ரோட்டில் வந்து செல்லும் வாகனஓட்டிகள் வண்டி ஓட்டவே சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து ஆறுமுகநேரிவரை வழக்கம் போலவே ரோட்டில் ஆங்காங்கே தெருவிலங்குகள் சுற்றி வருகின்றன.இந்த நிலையில் ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோவில், போலீஸ்ஸ்டேஷன் அருகே, தெற்குஆத்தூர், நரசன்விளை, கீரனூர், தண்ணீர்பந்தல், ஆறுமுகநேரி மெயின்பஜார் உள்பட பல இடங்களில் ஆடு, மாடு, பன்றி, நாய் என பல தெருவிலங்குகளும் தடையின்றி சுற்றி வருகின்றன. இந்த விலங்குகள் ரோட்டின் குறுக்கே அடிக்கடி பாய்வதால் இருசக்கர வாகனஓட்டிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே ஆத்தூர்-ஆறுமுகநேரிமெயின்ரோட்டில் சுற்றித்திரியும் தெருவிலங்குகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த வழியே வந்து செல்லும் வாகனஓட்டிகளின் உயிரைக்காக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments

Leave a Reply