ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற
மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்
பள்ளி பிளஸ்2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஆறுமுகநேரி நகர்நல மன்றம்
சார்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளையும், தலைமை ஆசிரியை பிரேமலதா அனிதாவையும்
மன்ற தலைவர் பூபால்ராஜன், கல்வி புரவலர் ராஜாமணி, ஆகியோர் பாராட்டினர்.
எஸ்எஸ்எல்சி தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கிருஷ்ணகீதா 2வது இடம் பெற்ற
மாணவி செல்வராணி ஆகியோருக்கு பரிசு வழங்கினர்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
0 comments