.ஆத்தூர்
மற்றும் ஆறுமுகநேரி சுற்றுப்பகுதியில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஆத்தூர்,
ஆறுமுகநேரிசுற்றுப்பகுதியில் போலீசார் தொடர்ந்து வாகனத்தணிக்கையில்
ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதில் மனிதாபமான அடிப்படையில் பெண்
வாகனஓட்டிகளுக்கு அவ்வப்போது போலீசார் கருணை காட்டுகின்றனர்.இந்நிலையில்
போலீசார் பெண்களை கண்டுகொள்ளாமல் விடுவதால், லைசென்ஸ் இல்லாமல்
ஹெல்மெட்டும் அணியாமல் வண்டி ஓட்டும் பெண்கள் தப்பி விடுகின்றனர்.
போலீசாரின் வழக்கமான அலட்சியத்தால் போதிய பயிற்சியும், உரிய லைசென்சும்
இல்லாமல் அதிக அளவில் வண்டி ஓட்டும் பெண்களால் அடிக்கடி சிறுசிறு
விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. வாகன சோதனையில் பெண்களை
கண்டுகொள்ளாமல் விடும் போலீசார் குறைந்தபட்சம் அவர்கள் லைசென்ஸ்
போடுவதற்காவது அறிவுறுத்தினால், பெண்களும் பொறுமையாகவும், பொறுப்பாகவும்
சாலைவிதிகளை மதித்து வண்டி ஓட்டும் நிலை ஏற்படும். இதனால் பெண்களின்
கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் குறைய வாய்ப்பு ஏற்படும்.எனவே
விபத்துகளை குறைக்கும் வகையில் பெண் வாகனஓட்டிகளின் விஷயத்திலும் அக்கறை
காட்ட வேண்டுமென்பதே பொதுமக்கள் அனைவரின் விருப்பம்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் உரிய லைசென்ஸ் இல்லாமல் அதிக அளவில் பெண்கள் வாகனம் ஓட்டி வருவதால் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன
0 comments