ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , ஆறுமுகநேரி » மார்கழி சிறப்பு பஜனை


 ஆறுமுகநேரி தேவார பக்த சபைகளில் மார்கழி மாத பஜனை சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது..
மாதங்களில் சிறந்தது மார்கழி. இந்த மாதம் ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாது அறிவியல் ரீதியாகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் பிரம்ப முகூர்த்தத்தில் எழுந்து நீராடி கோயில்களுக்கு செல்வது உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. ஆறுமுகநேரி லெட்சுமிமாநகரத்தில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜ தேவார பக்த பஜனையும், விநாயகர் கோயில் தெருவில் சைவ சித்தாந்த சங்கமும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் பஜனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி 1ம் தேதி முதல் பஜனையை துவக்கினர். நடராஜர் தேவார பக்த பஜனை ஆலயத்தில் இருந்து பஜனை புறப்பட்டு லெட்சுமிமாநகரம், காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதிதெரு வழியாக மீண்டும் ஆலயம் சென்றடைகின்றனர். அதே போன்று சைவ சித்தாந்த சங்கத்தில் இருந்து புறப்பட்டு காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதி தெரு, விநாயகர் கோயில் தெரு வழியாக சங்கத்திற்கு சென்றடைகின்றனர். நடராஜர் தேவார பக்த பஜனை ஆலயத்தில் அதன் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் சைவ சித்தாந்த சங்கத்தில் சங்கரலிங்கம் தலைமையிலும் பஜனைகள் நடந்து வருகிறது.

0 comments

Leave a Reply