ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » திருச்செந்தூரில் சிறுபான்மையோருக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம்


திருச்செந்தூரில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் சிறுபான்மையினருக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மாநில தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவன மாநில இயக்குநர் ஜி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறைச் செயலர் சங்கரநாராயணன், ஸ்ரீ குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்த் திட்ட அலுவலர் பெருமாள், மாவட்டத் தொழில்மையப் பொதுமேலாளர் ஜி.ஞானசேகர், தோல் பொருள் தயாரிப்பு ஆலோசகர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 லோபோ ஜெயசீலன் தொகுத்து வழங்கினார். குட்டிராஜா வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி நன்றி கூறினார்.
Tags:

0 comments

Leave a Reply