ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , ஆறுமுகநேரி » மாவட்ட வெள்ளி விழா மாநில அளவிலான கிரிக்கெட்சாகுபுரத்தில்தொடக்கம்


மாவட்ட வெள்ளி விழா மாநில அளவிலான கிரிக்கெட்சாகுபுரத்தில்தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சாகுபுரத்தில் சனிக்கிழமைதொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகத்துடன் தூத்துக்குடிமாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து மாநில
அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது.வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தேனி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டஅணிகள் கலந்து கொள்கின்றன.தொடக்கவிழா சனிக்கிழமை சாகுபுரம் டிசிடபிள்யூ
விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. விழாவுக்குடிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவர்ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார்.உதவித் தலைவரும் கிரிக்கெட் சங்க மாவட்ட துணைத் தலைவருமான ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடக்கி
வைத்துப் பேசினார்வெள்ளிவிழாவை முன்னிட்டு சாகுபுரம் டிசிடபிள்யூ
நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், செயலர் சிவகுமரன்,டிசிடபிள்யூ உதவித் தலைவர் சுபாஷ்டாண்டன், பால்ராஜையா, ஆத்தூர் பேரூராட்சித் தலைவர்
முருகானந்தம், துணைத் தலைவர் இ.ஆண்டியப்பன்,மற்றும் நிறுவன பொது மேலாளர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments

Leave a Reply