ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுகனேரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 பஜாரில் உள்ள மதுபான கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். விதிகளுக்குப் புறம்பாக நேர காலமின்றி மதுக்கூடங்களில் மது விற்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் பி.ஆனந்தவேல் தலைமை வகித்தார். துணைச் செயலர் எஸ்.சிவபெருமாள், பி.ராமநாதன், ஏ.சக்திகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த பாலமுருகன், ஒன்றியச் செயலர் வி.நடேச ஆதித்தன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.கிருஷ்ணராஜ், கே.எஸ்.கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.எம்.ராமையா, முக்காணி என்.வீரபாகு, திருச்செந்தூர் ஏ.எம்.கணேசன், குரும்பூர் எம்.ராஜா, டிசிடபிள்யூ ஏஐடியூசி கிளைத் தலைவர் ஆர்.அசோகன், தர்மலிங்கம், ராஜேந்திரன், நல்லூர் செயலர் கே.பி.முருகன், வி.ஆண்டி, ஒன்றியத் துணைச் செயலர் இசக்கி, டிசிடபிள்யூ ஏஐடியூசி கிளை செயலர் பி.லோகநாதன், பாலு மற்றும் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments

Leave a Reply