ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » மாணவிகள் பேரவை தேர்தல்

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாணவியர் பேரவை தேர்தலில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாணவியர் பேரவை தேர்தலில் கல்லூரியின் அனைத்துத் துறை சார்ந்த மாணவியர் பலர் போட்டியிட்டனர்.
 கல்லூரியின் மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி எஸ்.ஹவ்வா நஜாஹா நவ்ஸீன் பேரவைத் தலைவராகவும், பொருளியல் துறை இரண்டாமாண்டு மாணவி எம்.முருகேஸ்வரி துணைத் தலைவராகவும், ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவி டி.கீர்த்திகா செயலராகவும், அத்துறையின் முதலாமாண்டு மாணவி என்.ஃபஜீலா துணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இவர்கள், பேரவை மன்றத் துவக்க நாள் முதல் இரண்டாண்டுகளுக்கு இப்பொறுப்பில் செயல்படுவர்.
 வெற்றிபெற்ற மாணவியர் பேரவை நிர்வாகிகளை கல்லூரியின் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் வாழ்த்தினர்.
 ஏற்பாடுகளை, கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவியும், மாணவியர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஜெ.ஷர்மின் மேரி ஜானகி செய்திருந்தார்.

0 comments

Leave a Reply