ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் வட்டார வணிகர்கள் தொழிலை பதிவு செய்ய வேண்டுகோள்


திருச்செந்தூர் வட்டார பகுதியைச் சேர்ந்த உணவு
வணிகர்கள் தொழிலை பதிவு செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி தனது செய்தி குறிப்பில்
கூறியிருப்பதாவது, உணவு பாதுகாப்பு மற்றும் தாங்கள் சட்டம் 2006 இந்தியா
முழுவதும் 5.8.2011 முதல் அமல்படுத்தப்பட்டு நடந்து வருகிறது. இந்த
சட்டப்படி உணவு விடுதிகள், டீக் கடைகள், பலசரக்கு கடைகள், குளிர்பான
கடைகள், பெட்டிக் கடைகள், காய்கறி, பழக்கடைகள், சுவீட் ஸ்டால், பேக்கரி,
இறைச்சி கடைகள், உணவு பொருட்கள் ஏஜென்சி, வினியோகஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள், கரும்புச்சாறு கடைகள், பள்ளி, கல்லூரி கேண்டீன்,
விடுதிகள், டாஸ்மாக் பார்கள், கோயில் பிரசாத ஸ்டால்கள், வாகனம் மூலம் உணவு
பொருட்கள் வினியோகிப்பவர்கள், ஐஸ் கம்பெனி, சோடா தயாரிப்பாளர்கள், பால்
விற்பனையாளர்கள், தள்ளுவண்டி உணவு கடைகள், சாலையோர இரவு கடைகள் போன்ற
அனைத்து வகையான உணவு தொழில் புரிபவர்கள் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ்
கண்டிப்பாக பெற வேண்டும். திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்
அலுவலகம், திருச்செந்தூர் யூனியன் அலுவலக வளாகத்துக்குள் செயல்படுகிறது.
விவரங்களுக்கு 94865 57634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து
கொள்ளலாம். திருச்செந்தூர் வட்டாரத்துக்குட்பட்ட திருச்செந்தூர் டவுன்
பஞ்.,ஆறுமுகநேரி டவுன் பஞ்., கானம் டவுன் பஞ்., காயல்பட்டினம் நகராட்சி
மற்றும் மேலத்திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி, பள்ளிபத்து,
வீரபாண்டியன்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் ரூரல், மேலப்புதுக்குடி,
வீரமாணிக்கம், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை ஆகிய 11 பஞ்.,கள் பகுதிகளில்
உள்ள உணவு வணிகர்கள் திருச்செந்தூரில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்
அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்
இணைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். 
மேலும் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் 3, குடும்ப அட்டை
நகல் ஒன்று, புகைப்பட அடையாள அட்டை நகர் ஒன்று போன்றவை இணைக்க வேண்டும்.
உரிமம் அல்லது பதிவு சான்று இல்லாமல் உணவு தொழில் செய்வோர் மீது 6 மாதம்
வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று
கூறப்பட்டு உள்ளது. எனவே திருச்செந்தூர் வட்டார உணவு வணிகர்கள் தங்கள் உணவு
தொழிலை உடனடியாக பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த
தகவலை திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பொன்முத்து ஞானசேகர்
தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் சுதந்திரதினவிழா
தூத்துக்குடி வஉசி.துறைமுகத்தில் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது.
விழாவில் வஉசி துறைமுகப்பொறுப்புக் கழகத் துணைத்தலைவர் நடராஜன் தேசியகொடியை
ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, துறைமுக தீயணைப்பு படை,
துறைமுகப் பள்ளியின் என்சிசி,மாணவ,மாணவியர் படை மற்றும் துறைமுகப்பள்ளி
மாணவ,மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது. தற்சமயம் பொருளாதார வளர்ச்சிக்காக நமதுநாடு
எதிர்கொண்டிருக்கும் உள் கட்டமைப்பு விரிவாக்கத்தின் சவாலை கருத்தில்கொண்டு
கடல்சார் திட்டம் 2020 ல்இந்திய துறைமுகங்களில் தற்சமயம் உள்ள கொள்ளளவான
1000 மில்லியன் டன்களை 3500 மில்லியன் டன்களாக 2020 ஆம் ஆண்டிற்குள்
உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
வஉசி சிதம்பரனார் துறைமுகத்தை பொறுத்த அளவில் 31-3-12 வரை துறைமுகத்தின்
கொள்ளவு,33.34 மில்லியன் டன்களாக உள்ளது. தற்சமயம் உலக அளவில் பொருளாதார
வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும் கூட வ.உ.சிதம்பரானார் துறைமுகப்பொறுப்புக்
கழகம் நடப்பு நிதியாண்டில் கடந்த நான்கு மாத கால அளவில் 9.54 மில்லியன் டன்
சரக்குகளைக் கையாண்டு கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் கையாண்ட சரக்கின்
அளவை விட 1 சதவீதம் கூடுதலாக கையாண்டுள்ளது. துறைமுகத்தில் அனல்மின்
கரி,தொழிற்சாலை கரி, திரவபெட்ரோலிய பொருட்கள், உரம் மற்றும் உரம்
தயாரிப்பதற்கான மூலப்பொருடகள், பயறு வகைகள், கச்சா சர்க்கரை , சமையல்
எண்ணெய், கட்டுமானத்திற்கு தேவையான சரக்குகள், இயந்திர தளவாடங்கள் உட்பட பல
சரக்குகள் கையாளப்படுகின்றன. 
மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துறைமுக நிர்வாகம் பல்வேறு திட்டப்பணிகளை
முக்கியமாக உள்ள துறைமுக விரிவாக்கத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில்
செயல்படுத்திவருகிறது. மேலும் வடக்கு சரக்கு தளம் 2 மற்றும் 3
கட்டுமானப்பணிகள் பொதுசரக்குகள் கையாள இரண்டு ஆழம் குறைந்த கப்பல் தளங்கள்
கட்டுதல் எட்டாவது கப்பல் தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் போன்ற
பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த துறைமுக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சென்ற கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள்
மாணவ,மாணவியர்கள், மற்றும் மிகச்சிறப்பாக பணிபுரிந்த துறைமுக மற்றும்
துறைமுக சரக்கு கையாளும் பிரிவின் அலுவலர்கள் ஊழியர்கள் விளையாட்டு
வீரர்கள் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர்களுக்கு பரிசு வழங்கி
கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்
நடந்தது. சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி மேயர் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு பள்ளிமாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

0 comments

Leave a Reply