ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News , ஆத்தூர் , ஆறுமுகநேரி » ஆத்தூர் அருகே தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: பாஜக

ஆத்தூர் அருகே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென பாஜக கோரி உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், ஆறுமுகனேரி நகர பாஜக தலைவர் ஆர்.தினகரபாண்டியன் அளித்த மனு:
தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதி மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருவது தாமிரவருணி ஆறு. வற்றாத ஜீவநதியாக இருந்த இந்த ஆற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தண்ணீரே இல்லாத அளவுக்கு வறட்சியாக உள்ளது. இதனால் விவசாயத்துக்கு மட்டுமன்றி குடிநீருக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது.
இதனால் ஆத்தூர் மற்றும் ஆறுமுகனேரி உள்ளிட்ட திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததுதான் காரணம். இதனால் கடல் நீர் உள்புகுந்து நீர் உப்பு நீராகி விட்டது.இதுபோன்ற இக்கட்டான காலங்களில் கடல் நீர் உள்புகாமல் தடுத்திடும் வகையிலும் மேலும் வெள்ள நேரங்களில் நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் வகையிலும் ஆத்தூர் அருகிலுள்ள சேர்ந்தபூமங்கலத்தில் தடுப்பணை அமைக்க வேண்டுமென்றார் அவர்.

0 comments

Leave a Reply