தூத்துக்குடிஎட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அரசினர் தொழிற்பயிற்சியில் சேர்வதற்கு வரும் 23ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பித்து எந்த தொழிற் பிரிவுகளிலும் இடம் கிடைக்காதவர்கள் பயிற்சியில் சேர்வதற்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளி (போன் எண் 0461-2340133), திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (போன் எண் 04639-2342253), நாகலாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (போன் எண் 04638-242687) ஆகிய நிலையங்களில் விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.விண்ணப்பத்தினை 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மூன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கு விருப்பப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வரும் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You Are Here: Home» திருச்செந்தூர் » தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம்அரசு ஐ.டி.ஐயில் 23ம் தேதி வரை சேரலாம்
0 comments