ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » ஆறுமுகநேரியில் வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆறுமுகநேரியில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தியாவில் சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக்
கூடாது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை நிறுத்தி வைக்க
வேண்டும். சேவை வரிச்சட்டம் அமலாக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்
நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவர் தாமோதரன்
தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர்
பாஸ்கரன் முன்னிலை வகித்தார். 
மாவட்ட தலைவர் காமராசு, சங்க உறுப்பினர்கள் செல்லத்துரை, மேகநாதன்,
கிழக்கித்துமுத்து, ஜெயசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயற்குழு
உறுப்பினர் ராஜாராம் நன்றி கூறினார்.
Tags:

0 comments

Leave a Reply