ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி
கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என காந்தி மக்கள் கட்சியினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காந்தி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர்
அலாய்வாஸ் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில்
தெரிவித்துள்ளதாவது, ஆறுமுகநேரி மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்ததை விட தற்போது உயர்ந்துள்ளது. இதனால் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகப்பேறு
காலங்களில் உரிய சிகிச்சை பெற முடியாமல் தாய்மார்கள் பெரிதும்
அவதிப்படுகின்றனர். பொதுமக்கள், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு
போதுமான வசதி இல்லை. 24 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார
நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். அவசர சிகிச்சைக்கு கர்ப்பிணிப் பெண்கள்
நோயாளிகள் காயல்பட்டணம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள
ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே மக்கள் தொகை அதிகமாக
உள்ள ஆறுமுகநேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட
சுகாதா நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். தினமும் 5 டாக்டர்கள் மற்றும்
செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்து 24 மணி நேரமும் அவசர சிகிச்சை
பெற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
0 comments