ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தின் படி அரசு அலுவலகம், பள்ளிக்கூடம்,
மதவழிபாட்டுதலம், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை கண்டறிந்து
அங்கு இலவச மரக்கன்று வழங்கி அதனை நட்டு பராமரிப்பு செய்ய வலியுறுத்த
வனத்துறை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.
இதன்படி திருச்செந்தூர் வனத்துறை சார்பில் ஆயிரத்து 500 மரக்கன்றுகளை
செந்தூர் சரக கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கூட்டுறவு சார்பதிவாளர்
பத்பநாபன் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தார். விழாவில் சங்க செயலாளர்
உஷாஜோதி, மேலாளர் நம்பி, காசாளர் செந்தூர், வெங்கடேசன், மரகதவேல், அந்தோணி
மற்றும் ஆத்தூர், காயாமொழி, உடன்குடி, மாதவன்குறிச்சி, சேதுக்குவாய்த்தான்,
குரும்பூர், மாதவன்குறிச்சி, பரமன்குறிச்சி பகுதியில் இருந்து கூட்டுறவு
சங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 comments