ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News , ஆறுமுகநேரி » விளைச்சலோ அதிகம் விலையோ குறைவு


ஆறுமுகநேரியில் புளி விலை குறைந்ததால் வீதி வீதியாக சென்று கூவி கூவி விற்கின்றனர்.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவது உண்டு. அதே போன்று புளி இல்லாத
சமையலும் இல்லை. தென்மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிகம் புளியை
சேர்ப்பதுண்டு. இப்பகுதியில் நாலுமாவடி, தென்திருப்பேரை, குரங்கனி போன்ற
இடங்களில் புளிந்தோப்புகள் அதிகம் உள்ளது. இங்கு விளைச்சலாகும் புளி
தென்மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் அல்லாது வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி
செய்யப்படும். இப்பகுதிகளில் புளி விளைச்சல் அதிகமாக இருந்ததால் புளி விலை
வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70
முதல் ரூ.80 வரை விற்பனையானது. தற்போது இது ரூ.50க்கு விற்கப்படுகிறது. 
விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சைக்கிள் மற்றும் டூவீலரில் புளியை கொண் டு
வந்து வீதி வீதியாக சென்று கூவி கூவி விற்கின்றனர். விளைச்சல் அதிகம், புளி
விளைச்சல் செய்வதற்கான செலவும் அதிகம். ஆனால் விலை மட்டும் வீழ்ச்சி
அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

0 comments

Leave a Reply