திருச்செந்தூரில் இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோயில்களில் தரிசனம் செய்வதற்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருச்செந்தூர் தேரடி
திடலில் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர்
முருகேசன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர்கள் ஜெயசிங்,
ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆதிஷேசன்
பேசினார். மாவட்ட பொதுச் செயலர் சக்திவேலன், பாஜ.,மாவட்ட பொதுச் செயலர்
செந்தில்வேல், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்பரமேஸ்வரன்,
சுந்தரவேல், மாவட்ட செயலர் பரமசிவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
சின்னத்துரை, பொன்கந்தசாமி, ஐயப்பன், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி
பட்டுகனி, மாவட்ட செயலர் சரோஜா, மாவட்ட துணைத் தலைவர் பத்மாவதி, மாவட்ட
செயற்குழு உறுப்பினர் கொற்கைசெல்வி, இந்து முன்னணி நகர செயலர் ராஜேந்திரன்
உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் திருச்செந்தூர் நகர
தலைவர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
0 comments