ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» poem , Tamil » தமிழ்மொழி வாழ்த்து



தமிழ்மொழி வாழ்த்து-மகாகவி பாரதியார்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிய வே
வான மளந்த தனைத்து மளந்திடு
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன் மணம் வீசி
என்றென்றும் வாழிய வே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழிய வே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி யோங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
Tags: poem , Tamil

0 comments

Leave a Reply