ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » குலசை காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா


குலசேகரன்பட்டணம் காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா
நடந்தது. குலசேகரன்பட்டணம் வடக்கூர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள
காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவையொட்டி காலை 11 மணிக்கு
நெல்லை திரு உருமாலை பன்னிரு திருமறை வழிபாட்டு குழு சார்பில் காரைக்கால்
அம்மையார் பதியம் முழுவதும் பாடப்பட்டது. நண்பகல் 1 மணிக்கு மகேஸ்வர
பூஜையும் தொடர்ந்து நாட்டில் நல்ல மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி
திருஞானசம்பந்தரின் மழை பதிகம் பாடினர்.பின்னர் பேராசிரியர் காளியப்பன்,
புலவர் அகதீஸ்வரன் ஆகியோரின் சமய சொற்பொழிவும் மாலை 5 மணிக்கு மாங்கனி பூஜை
நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதமாக மாங்கனியை இல்லங்குடி,
சண்முகம் ஆகியோர் வழங்கினர்.

0 comments

Leave a Reply