ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » வீரபாண்டியன் பட்டணத்தில் 60 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

 திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,ல்
அனுமதியின்றி வழங்கிய 60 குடிநீர் இணைப்புகளை கலெக்டர் உத்தரவின் பேரில்
அதிகாரிகள் துண்டித்தனர்.
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் 60 குடிநீர் இணைப்புகள்
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கலெக்டரின் அனுமதியின்றி
பஞ்.,மூலம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார்
கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறியும் பணியில் கடந்த
வாரம் ஈடுபட்டனர். 
அதன் அடிப்படையில் சனிக்கிழமை திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
லீமாரோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் ஆகியோர் திருச்செந்தூர்
தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ.,க்கள் சுப்புலெட்சுமி மற்றும் சத்தியபாமா
உட்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில்
ஈடுபட்டனர்.இந்நிலையில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,தலைவர் மாலாதேவி, பஞ்.,யூனியன் உறுப்பினர்
ஆனந்த்ரொட்ரிகோ, காயல்பட்டணம் அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுநர் பொன்பாண்டியன்
ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர். அதற்கு கலெக்டர்
உத்தரவின் பேரிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply