திருச்செந்தூர் டவுன் பஞ்.,நிர்வாகத்தை கண்டித்து நகர இ.கம்யூ.,கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்செந்தூரில் முறையான குடிநீர் வழங்க வேண்டும், பாதாள சாக்கடைத்
திட்டத்தில் சிமெண்ட் சாலை யை முறையாக போட வேண்டும். அனைவருக்கும் குடும்ப
அட்டை வழங்க வேண்டும், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் கிராம நிர்வாக
அலுவலர் அலுவலகம் கட்டித்தரவேண்டும், ரதவீதிகள் மற்றும் காமராஜர் சாலைகளில்
மணல்மேடுகளை சீரமைக்க வேண்டும், அரசு உதவித்தொகை முதியோர், விதவை மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக வழங்க வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர்
கந்தசாமி, நகர உதவிச் செயலர் ஆண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகர பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மாவட்ட உதவிச் செயலர் கரும்பன், மாவட்டக்குழு உறுப்பினர்
கல்யாணசுந்தரம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர்
ஜெயக்குமார், மாதர் சங்க நகரச் செயலர் மலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஏஐடியுசி நகர தலைவர் லெட்சுமணன் நன்றி கூறினார்.
0 comments