ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » காயாமொழியில் சாலை மறியல் வாபஸ்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் நடக்கவிருந்த சாலை மறியல் ரத்து செய்யப்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் அவ்வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டது. அங்குள்ள குளத்தை ஆழப்படுத்தியும், ஊட்டுக்கால்வாயின் இரு ஓரமும் தடுப்பு சுவர் கட்டி கானம் கால்வாயின் குறுக்காக தடுப்பணை கட்ட வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டாவுடன் வழங்க வேண்டும், அரசு மேல்நிலைப்பள்ளி இடத்தில் மணல் திருடு போவதை தடுத்து கட்டடங்களுக்கு வெள்ளை அடிக்க வேண்டும், காயாமொழி ஊருக்குள் ரோட்டை சீரமைக்க வேண்டும் உட்பட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 30ம் தேதி திருச்செந்தூர்-தூத்துக்குடி ரோடு பஸ்ஸ்டாண்ட் முன்பு சாலை மறியல் நடக்கும் என கிராம மக்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திருச்செந்தூர் தாசில்தார் வள்ளிகண்ணு தலைமையில் காயாமொழி கிராம மக்கள் முன்னிலையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
குற்றாலத்தில் குவிந்த குடை மிளகாய்
குற்றாலம்: குற்றாலத்திற்கு குடை மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது குண்டு குடை மிளகாய். 

இந்த மிளகாயில் காரத்தன்மை கிடையாது என்பதால் பஜ்ஜி செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் மிளகாய் பஜ்ஜி மிகவும் பேமஸ் என்பதால் குற்றாலத்திற்கு குண்டு வகையை சேர்ந்த குடை மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது.

இது சீசன் காலகட்டங்களில் மட்டுமே விளையக்கூடியது என்பதால் கிலோ ஒன்றிற்கு 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.குற்றாலத்தில் சீசன் துவங்க உள்ள நிலையில் மிளகாய் பஜ்ஜி வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் இதனை விரும்பி வாங்கி ருசித்து செல்கின்றனர்.

0 comments

Leave a Reply