ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியில் பாஜ.,வினர் பஸ் மறியல்: 56 பேர் கைது

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் விலைவாசி உயர்வைக் கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடத்திய பாஜ.,வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும் நேற்று முன்தினம்மாநிலம் முழுவதும் பாஜ., வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினர். ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன், நகர தலைவர் தினகரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

போராட்டத்தில் ஒன்றிய துணைத் தலைவர்கள் சிவகுமார், ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் முருகானந்தம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுந்தர், முன்னாள் ஒன்றிய தலைவர் பற்குணபெருமாள், ஒன்றிய செயலாளர் முத்துகுமார், செந்தூர்பாண்டியன், நகர துணை தலைவர் கதிரேசன், கிருஷ்ணவேல், பொன்ராஜ், கோசல்ராம், காயல்பட்டணம் நகர தலைவர் மகேஷ், பொதுச் செயலாளர் பாலமுருகன் மற்றும் 26 பெண்கள் உட்பட 56 பேர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சப்இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் ஆகியோர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

0 comments

Leave a Reply