You Are Here: Home» » Tourist places to be developed in TN | ரூ.5 கோடியில் சுற்றுலா தல மேம்பாடு:அமைச்சர்
அழகர்கோவில்,குற்றாலம் உள்ளிட்ட 7 சுற்றுலாத்தலங்கள் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்பத்தூர், முக்கொம்பு, தேனி மேகமலை, சுருளி நீர் வீழ்ச்சி, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடமாடும் சுற்றுலா தகவல் வழிகாட்டி திட்டம் அமைக்கப்படும் எனவும், சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் மையம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
0 comments