ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , பழையகாயல் » பழையகாயலில் முப்பெரும்விழா


பழையகாயலில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவும் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து பழையகாயல் அன்னை பரிபூரணி மக்கள் மன்றத்தில் முப்பெரும் விழா நடத்தினர்.
       சட்ட விழிப்புணர்வு முகாம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்ட உதவி மற்றும் ஆலோசனை மைய துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
          விழாவிற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆலோசனைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜோ.பிரபுதாஸ் தலைமை வகித்தார்.மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான .குருவையா மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சு.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
        ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான தி.ஜெயகுமாரி ஜெமிரத்னா, ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் து.செல்வம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சு.வேலுமயில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
         பழையகாயல் பங்குதந்தை பவுல் ராபின்ஸ்டன், புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் து.சேவியர் சகாயராஜ், பள்ளி நலக்குழுத் தலைவர் .விவேகானந்தன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் .வே.ஜெயசங்கர், விவசாய சங்கத் தலைவர் .கண்ணன், வழக்கறிஞர்கள் .சங்கரபாண்டியன், சு.அருள்பாண்டியன் மற்றும் செ.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
        முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் லெ.கலா லெட்சுமணன் அனைவரையும் வரவேற்றார்.இறுதியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி தி.ஜெயகுமார் ஜெமிரத்னா நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply