ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி நகர திமுக நகர செயலாளர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருப்பவர் சுரேஷ். இவர் கடந்த மார்ச் 1ம் தேதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முடித்து விட்டு காரில் ஏறும் போது கத்தியால் குத்தப்பட்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே சுரேஷை கொலை செய்ய தூண்டியதாக திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன்ää திமுக பிரமுகரான ஆல்நாத் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக காயல்பட்டணம் பாஸ்நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் உதயகுமாரை (23) ஆறுமுகநேரி போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயகுமார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments

Leave a Reply