மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக் குழுவின் தலைவர் பாடகர் கோவனை இரண்டு நாள்கள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுக் கடைகளை மூடக் கோரி தமிழக அரசுக்கு எதிராகப் பாடியதாக, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக் குழுவின் தலைவர் கோவன் அண்மையில் திருச்சியில் கைது செய்யப்பட்டு. பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரிடம் 5 நாள்கள் விசாரணை செய்வதற்கு சென்னைப் பெருநகரக் காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் எழும்பூர் பெருநகரத் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கணேசன், கோவனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
கோவனின் போலீஸ் காவலை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரி்த்த நீதிமன்றம் கோவனின் நீதிமன்ற காவலுக்கு தடைவித்து உத்தரவிட்டது.
Tags:
சென்னை
0 comments