தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94வது நிறுவனர் தினவிழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94வது நிறுவனர் தினவிழாவையொட்டி தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன், அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வங்கியின் நிறுவனர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் பிரம்மாண்ட கேக்கை வெட்டி, அனைவருக்கும் வழங்கினார்.
0 comments