சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக.15) மதுக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து அரசு மதுபானக் கடைகளும், பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றையதினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் யாரும் மதுபான விற்பனையில் ஈடுபடக் கூடாது.
எனவே, ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கிவைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments