இந்தியாவில் இன்னும் 10 வருடங்களுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று அரசு, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது பற்றி மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய நீர்வள ஆதாரத் துறை இணையமைச்சர் சன்வர் லால் ஜாட் கூறியதாவது:
தற்போதைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிக்கும் அனைத்து ஆதார அமைப்புகளைக்கும் மேற்பட்டு தண்ணீர் தேவை எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.
இதன் காரணமாக, எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று இந்தத் துறையில் ஆலோசனைகள் வழங்கிவரும் "எவ்வரிதிங் எபவுட் வாட்டர்' என்று நிறுவனம் கணித்துக் கூறியுள்ளது.
0 comments