முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியுள்ளது.மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் குழு இன்று அணையை ஆய்வு செய்தது.
இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அணையை ஆய்வு செய்தனர்.
பேபி அணை, பிரதான அணை மற்றும் 13 மதகுகளை ஆய்வு செய்த அவர்கள் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு மற்றும் கசிவு நீர் வெளியேற்றம் போன்றவற்றை கண்காணித்தனர். அதன்பின் இன்று மூவர் குழு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிற்கு மூவர் குழுவின் தலைவர் நாதன் கூறுகையில் ‘‘தற்போது முல்லைப்பெரியாறு அணையில் 138.80 அடி நீர் உள்ளது. அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். மத்திய நீர்வள ஆணையத்திடம் அனுமதி பெற்று 152 அடியாகவும் உயர்த்தலாம்.
தமிழக அதிகாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் இனிமேல் தடுக்கப்பட மாட்டாது என்று கேரளா உறுதியளித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும்போது பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அணையை ஆய்வு செய்தனர்.
பேபி அணை, பிரதான அணை மற்றும் 13 மதகுகளை ஆய்வு செய்த அவர்கள் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு மற்றும் கசிவு நீர் வெளியேற்றம் போன்றவற்றை கண்காணித்தனர். அதன்பின் இன்று மூவர் குழு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிற்கு மூவர் குழுவின் தலைவர் நாதன் கூறுகையில் ‘‘தற்போது முல்லைப்பெரியாறு அணையில் 138.80 அடி நீர் உள்ளது. அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். மத்திய நீர்வள ஆணையத்திடம் அனுமதி பெற்று 152 அடியாகவும் உயர்த்தலாம்.
தமிழக அதிகாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் இனிமேல் தடுக்கப்பட மாட்டாது என்று கேரளா உறுதியளித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும்போது பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
திருச்செந்தூரைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் பட்டாமாறுதல் சேவை (Online Pata Transfer) படிப்படியாக தொடரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, குடியிருப்பு வருமானம், முதல் பட்டாதாரி மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சான்றுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தற்போது தமிழகஅரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கமாக பொது மக்களுக்கு எவ்வித சிரமுமின்றி இணையம் மூலம் பட்டா மாறுதல் (Online Pata Transfer) தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் ஆட்சியர் உத்தவின் பேரில் கடந்த 13ம் தேதி இணையவழி பட்டா மாறுதல் சேவை துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை தங்களது பொது சேவை மையத்திலும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது மூல ஆவணங்கள், தொடர் ஆவணங்கள், நடப்பு பதிவு ஆவணங்கள் மற்றும் வில்லங்கச் சான்று ஆகியவற்றின் அசல் ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லவேண்டும்.
மேற்கண்ட ஆவணங்களின் நகலை அந்த மையத்தில் சமர்ப்பிக்கவேண்டும். பதிவு கட்டணமாக ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) செலுத்த வேண்டும். பதிவுசெய்த நாளிலிருந்து 15 தினங்கள் கழித்து மனுதாரரின் பட்டாமாறுதல் குறித்த குறுஞ்செய்தி மனுதாரரின் கைபேசிக்கு வந்தவுடன், இணையதளத்தில் பட்டாவினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருச்செந்தூர் வட்டத்தில் முதல் கட்டமாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பொதுசேவைமையம் மற்றும் அருகில் உள்ள திருச்செந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நாசரேத் தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கி, ஆதிநாதபுரம், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு பொது இ-சேவை மையங்களில் இச்சேவை செயல்படுத்தப்படுகிறது.
இச்சேவை திருச்செந்தூர் வட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும், மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இதர வட்டங்களான சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய வட்டங்களில் இணையதளம் மூலம் பட்டாமாறுதல் சேவை (Online Pata Transfer) படிப்படியாக தொடரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது
அரசு கேபிள் டி.வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
முதல் அமைச்சர் ஆணையின்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் இசேவைமையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
தலைமைச் செயலகத்தில் ஒரு இசேவைமையமும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 264 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தலா ஒரு இ–சேவை மையமும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு இ–சேவைமையமும், சென்னைமாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 54 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு இ–சேவைமையமும், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு இசேவை மையமும் என மொத்தம் 339 இடங்களில் இசேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்துள்ளது.
இசேவை மையங்கள் மூலமாக தமிழகஅரசின் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 15,55,710 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 7,80,784 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 28,658 நபர்களுக்கு கைபேசி எண், இமெயில் முகவரி மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது. 2,818 நபர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
தற்போது 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் உள்ள இம்மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணைய வழிவிண்ணப்ப சேவைகளான நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவக்கி உள்ளது.
நிரந்தரப் பதிவு செய்ய ரூ. 50–ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30–ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ. 5–ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ. 20/–ம், சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணமான ரூ.50–ம் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்டதேர்வுக் கட்டணம் ஆகியவற்றை இம் மையங்களில் செலுத்தும் வசதிசெய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2–ஆம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி,தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பவனி வந்து, சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா‘ என்று பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி,தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இரவில் சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6–ம் திருநாளான வருகிற 17–ஆம்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வியாழக்கிழமை மாலை முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது..
பெரம்பூர், வியாசர்பாடி, என்னூர், தி.நகர், ஓட்டேரி, கிண்டி, மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புழல் பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. தரமணி, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை - பெங்களூரு இடையேயான பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில், விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாது:–
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிகமுக்கிய பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுவதிலும், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை, திருமங்கலத்தில் 60 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 806 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தினால் அண்ணா நகர், முகப்பேறு, பாடி, அம்பத்தூர், கொளத்தூர், மாதவரம் மற்றும் செங்குன்றம் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம்–மலைப்பட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; வேலூர் மாவட்டம்–சுந்தரம் பள்ளியில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருவண்ணாமலை மாவட்டம் மணலவாடியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
சேலம் மாவட்டம்–எடப்பட்டிபுதூரில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், இராமநாயக்கன் பாளையத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வீரகனூரில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஜல்லூத்துப்பட்டியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஏத்தாப்பூரில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
நாமக்கல் மாவட்டம்–கோணப்பாதையில் 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வெள்ளக்கல்பட்டியில் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சோமனப்பட்டியில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வேலகவுண்டம்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
விழுப்புரம் மாவட்டம்–கலித்திராம்பட்டில் 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், பிள்ளையார் குப்பத்தில் 8 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், புளியங்கோட்டையில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;
ஈரோடு மாவட்டம்–சித்தாரில் 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கொமாரபாளையத்தில் 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நாவிதன் காட்டுவலசுவில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், துறையம்பாளையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நல்லியம் பாளையத்தில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தோப்புக்காட்டில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், முள்ளம்பட்டில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பெத்தாம் பாளையத்தில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
கோயம்புத்தூர் மாவட்டம்–சுகுணாபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், மதுக்கரையில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திண்டுக்கல் மாவட்டம்–முள்ளிப்பாடியில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஓலையூரில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தஞ்சாவூர் மாவட்டம்–துறையூரில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பின்னையூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வெங்கரையில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
கடலூர் மாவட்டம்–தென்னம்பாக்கத்தில் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாகப்பட்டினம் மாவட்டம்–கோனேரிராஜபுரத்தில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், மணியன்தீவில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம்–சிறுவரை கிராமத்தில் 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வீரமங்கலத்தில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
விருதுநகர் மாவட்டம்–ஆமத்தூரில் 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்கள், மேலத்தொட்டி யாப்பட்டியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், மம்சாபுரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வெற்றிலை ஊரணியில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருப்பூர் மாவட்டம்–நவநாரியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
சென்னை மூலக்கடையில் 49 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம்–கணபதி (டெக்ஸ்டூல்) அருகில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் இருவழி மேம்பாலம்;
சென்னை–வியாசர்பாடியில் 80 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜி.என்.டி. சாலையில், கி.மீ.4/3ல் உள்ள கீழ்ப்பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; வேலூர் மாவட்டம்–உள்ளியில் 18 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண். 69க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம்–இருகூரில் 18 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண். 2க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், ஜமீன் ஊத்துக்குளியில் 20 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண். 3க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம்;
என மொத்தம் 364 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் மற்றும் பாலங்களை தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் சேலம் தெற்கில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம், மேட்டூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை; இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை;
என மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம் மற்றும் பயணியர் மாளிகைகளை தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட பாலங்கள் மற்றும் கட்டடங்களின் மொத்த மதிப்பு 365 கோடியே 76 லட்சம் ரூபாய் ஆகும்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலைப் பயணம் விபத்துக்கள் இலவசம்.இந்த சாலையில்தான் அரசியல் பிரமுகர்கள்,முக்கிய அதிகாரிகள் அடிக்கடி பயணம் செய்கின்றனர்.எப்போது விடிவு காலம்....
கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.
எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத்தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300. எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகமெங்கும் கன மழை பெய்து வருவதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில், கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வ மகள் ("சுகன்யா சம்ரித்தி') சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதேபோல் ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை அதிகரிக்கும் வகையில்,"பொன் மகன் வைப்பு நிதி' என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய அரசால் இந்த இரண்டு நீண்ட கால சேமிப்புத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
குழந்தைகள், பெற்றோரிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, அஞ்சல் துறைத் இந்தத் திட்டத்தில் இணையும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 13, 14 ஆகிய இரண்டு தினத்தில் அஞ்சல் நிலையத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் குழந்தைகளுக்கு, மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் சிறப்பு நினைவு அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை, அவரைப் பற்றிய விவரங்களுடன் அடங்கிய கையேடு ஆகியவை பரிசாக வழங்கப்படும்.
சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94வது நிறுவனர் தினவிழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94வது நிறுவனர் தினவிழாவையொட்டி தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன், அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வங்கியின் நிறுவனர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் பிரம்மாண்ட கேக்கை வெட்டி, அனைவருக்கும் வழங்கினார்.
பழனி மலைக் கோயிலுக்கு படிக்கட்டுகளில் ஏறிச்செல்லமுடியாத பக்தர்கள் செல்ல பயன்படும் ரோப்காருக்கு புதிய இரும்பு வடக்கயிறு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் மலைக் கோயிலுக்கு பாதுகாப்பாகச் செல்லும் பொருட்டு, இந்த ரோப்கார் தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, கந்த சஷ்டி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, ரோப்காரின் வடக்கயிறை புதிதாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாள்களுக்கு ரோப்கார் நிறுத்தப்பட்டு, புதிய வடக்கயிறு மாற்றும் பணிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக, கொல்கத்தாவிலிருந்து ரோப்கார் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, பிளைசிங் எனப்படும் முக்கியமான வடக்கயிறு இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்ததும், சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ரோப்கார் வல்லுநர் குழு நேரில் ஆய்வு செய்யும். பின்னர், பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப்கார் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்ற போதும் , 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல், நோட்டா' பொத்தானை அமுக்கி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 9,00,721 வாக்காளர்கள் நோட்டா-வுக்கு வாக்களித்துள்ளனர். இது பதிவான மொத்த வாக்குகளில் 2.5 சதமாகும்.
தாவரங்கள்
தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார்வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன. இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன. கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும்.
விலங்குகள்
மன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும். மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன.தற்பொழுது பரந்து நிற்கும் மன்னார்வளை குடாவில் ஆலைக் கழிவுகளும் கடல்வாழ் உயிரினங்களுக்கும்,மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது